புதன், 12 ஜனவரி, 2022

 கழுத்துக்கு சதங்கைகட்டி

கொம்புசீவி பொட்டுமிட்டு

கழநியும்புண்ணாக்கும்

பொங்கலோடு படைத்து  பெற்றபிள்ளையைப்போல்

பேணிவளர்த்து  வீரம் ஊட்டியே

வீறு கொள்ள வைத்தாய்.

 வாழ்வுதந்த நீயே என்னை விற்க்கும்நிலை ஏன்?

 கோழைகள் மலிந்தனரா?  வீரம்

 விளைந்த மண்ணில்  விழுப்புண்கள் வீரத்தின் அடையாளம்  வீட்டு வளர்ப்பு செல்லங்கள் நாங்கள்  

 ஜாலியாக விளையாடுவோம் வாருங்கள் ஜல்லிக்கட்டு களைகட்டடும்் கல்யாண மேளம்கொட்டடும்